நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை இரு பருவங்களை பிரித்து தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,அதனை கருத்தில் கொண்டு,நடப்பு கல்வி ஆண்டில் அந்த வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை இரு பருவங்களாக பிரித்து தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு பருவங்களில் எடுக்கப்படும் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.