ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசி, டெல்டா வகை கொரோனாவை முறியடிப்பதாகவும், குறைந்தது 8 மாதங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரேயொரு டோஸ் போடக்கூடிய இந்த தடுப்பு மருந்து, உடலில் வலுவான நோய்எதிர்ப்பு புரதங்கள் உருவாக்கியதாகவும், டெல்டா உள்ளிட்ட அனைத்து உருமாற்ற வகைகளுக்கு எதிராக 8 மாதங்களுக்கு பாதுகாப்பை வழங்குவதாகவும் ஜான்சன் அண்டு ஜான்சன் தெரிவித்துள்ளது.
தங்களது தடுப்பூசி 85 சதவீத திறன் வாய்ந்தது என்றும், கொரோனா பாதித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையையும் மரணம் ஏற்படுவதையும் தவிர்க்கிறது என அந்நிறுவனம் கூறியுள்ளது.