கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக சென்னை அரசு மருத்துவமனைகளில் புதிதாக செறிவூட்டும் ஆக்சிஜன் கருவி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா ! அச்சம் தரும் புதிய உச்சம் ! - என தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது, வைரஸ் தொற்று பாதிப்பு.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைக்காமல் தவிக்கும் கொரோனா நோயாளிகளுக்கு TVS நிறுவனம் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
முதற்கட்டமாக 500 செறிவூட்டும் ஆக்சிஜன் கருவிகளை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கும், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும் இந் நிறுவனம் நன்கொடையாக வழங்கி உள்ளது.
இந்த புதிய கருவி எவ்வாறு இயங்குகிறது? என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கி காட்டினர்.
செறிவூட்டும் கருவியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் முகக்கவசத்தை மூக்கில் பொருத்திக் கொண்டால், சிகிச்சை பெறுவோருக்குத் தேவையான சுத்திகரிக் கப்பட்ட ஆக்சிஜன் தாராளமாக கிடைக்கும். சுற்றுப் புறத்தில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சி, மாசு இல்லா ஆக்சிஜனாக மாற்றி ஈரப்பதத்துடன் நன்மை பயக்கும் ஆக்சிஜனாக மாற்றி தருகிறது இந்த செறிவூட்டும் கருவி .
செறிவூட்டும் கருவியில் 300 ml தண்ணீரை ஊற்றி, கருவியுடன் இணைக்கப்பட்டு இருக்கும் குழாய் மூலம் ஒரு கப்பில் உள்ள தண்ணீரில் அந்த குழாயை மிதக்க செய்யும் போது, சுற்றுப்புறத்தில் உள்ள ஆக்சிஜன் உறிஞ்சப்படுவது தெரிகிறது.
செறிவூட்டும் கருவியிடன் இணைக்கப்பட்டு உருக்கும் முகக்கவசத்தை மூக்கில் பொருத்திக் கொண்டால், நமக்கு தேவையான சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜன் பெற முடிகிறது.
பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மூச்சத் திணறல் 90க்கும் குறைவாக இருப்பவர்களுக்கு 6 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இந்த அளவை விட குறைவான அளவில் ஆக்சிஜன் இருக்கும் கொரோனா நோயாளிக்கு, 10 முதல் 15 லிட்டர் வரை ஆக்சிஜன் தேவைப்படும். செறிவூட்டும் கருவியில் உள்ள கண்ட்ரோலரை மாற்றி அமைத்து கொண்டால், மருத்துவரின் ஆலோசனை படி நமக்கு தேவையான ஆக்சிஜனை பெறமுடியும் என்பது இந்த கருவியின் சிறப்பம்சம்.