சென்னையிலுள்ள மீன் மார்க்கெட்டுகளில் அசைவ பிரியர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பட்டினப்பாக்கம் கடற்கரையில் மீன் மற்றும் இறைச்சி வாங்க ஏராளமான மக்கள் காலை முதலே குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த மீன் மார்க்கெட்டிற்கு நுழையும் இடத்தில் தடுப்புகளை அமைத்த போலீசார், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றும்படி அறிவுறுத்தினர்.
இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காசிமேடு மீன் மார்க்கெட்டிலும் மீன் மற்றும் இறைச்சி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.