செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொள்ளைக்கார வங்கி மேலாளர்... விடுவித்த போலீஸ்... கோர்ட்டு உத்தரவு மீறல்.!

Apr 19, 2021 02:48:43 PM

வாடிக்கையாளருக்கே தெரியாமல் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 கோடியே 28 லட்சம் ரூபாய் அளவிற்கு பணத்தை திருடிய சிட்டியூனியன் வங்கி மேலாளர் மற்றும் அரசியல் பிரமுகர் மகன் மீது  நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த அவர்களை காவல்துறையினர் கைது செய்யாமல் அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது

அரியலூர் மாவட்டம் விளந்தை சிட்டி யூனியன் வங்கி கிளையின் வாடிக்கையாளரான மருதை என்பவர், வங்கியில் தனது சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, தொழில் அபிவிருத்திக்காக 2 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றிருந்தார்.

மருதை வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை அவரது ஒப்புதலோ, கையொப்பமோ இன்றி அந்த வங்கியின் மேலாளார் சூரிய நாராயணன் என்பவர், திமுக பிரமுகரின் மகன் வீரவேல் என்பவர் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். எந்த ஒரு ஆவணத்திலும் மருதையின் கையெழுத்து இல்லாமல் சுமார் 1 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 390 ரூபாய் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் சேர்ந்து கையாடல் செய்துள்ளனர்.

தன் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்து அறிந்து அதிர்ச்சியான மருதை, கும்பகோணத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியின் மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். சிட்டியூனியன் வங்கியின் விஜிலன்ஸ் குழு விசாரணை அறிக்கையில், சூரியநாராயணன் முறைகேட்டில் ஈடுபட்டது உண்மை என்று அறிக்கை அளித்ததோடு, அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் பரிந்துரை செய்தனர். அதன் படி வங்கி நிர்வாகம் சூரிய நாராயணனை சஸ்பெண்டு செய்தனர். ஆனால் கடன் தொகையை மருதையை கட்டச்சொல்லி கடுமையாக நிர்பந்தம் செய்தனர்.

இதையடுத்து தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது குறித்த விஜிலன்ஸ் குழு அறிக்கை, மற்றும் கையெழுத்தில்லா ஆவணங்கள், வீரவேல் எடுத்த பணத்தை யார் யாருக்கு கொடுத்துள்ளான் என்பது உள்ளிட்ட முழுமையான ஆதாரங்களுடன் அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் 2019 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டதால், காவல்துறையினர் குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தனர்.

அவர் உத்தரவிட்டும் போலீசார் நடவடிக்கையை தாமதப்படுத்தியதோடு,கடந்த ஒரு வருடமாக கொரோனாவை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதற்கிடையே நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த புகார் குறித்து அரியலூர் மாவட்ட குற்றபிரிவு காவல்துறையினர், சூரியநாராயணன், வீரவேல் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இருவரையும் கைது செய்யாமல் வழக்கை மீண்டும் கிடப்பில் போட்டனர்.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 5 ந்தேதி மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் மருதை, அப்போது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தலைமறைவாக இருப்பதாக கூறி அரியலூர் போலீசார் கால அவகாசம் கோரியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து இன்னும் 3 மாத காலத்திற்குள் வழக்கை முழுமையாக விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் காலக்கெடு முடிந்து 12 நாட்கள் கடந்த நிலையில் அரியலூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், வழக்கை வேகமாக விசாரித்து வங்கிமேலாளர் சூரிய நாராயணன், அரசியல் பிரமுகர் மகன் வீரவேல் ஆகியோரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலையிட்டு அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானமாக போக சொன்னதாக கூறப்படுகின்றது. மேலும் வங்கி மேலாளர் சூரிய நாராயணன், வீரவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்யாமல் எழுதி வாங்கிக் கொண்டு விடுவித்து அனுப்பியதாகவும் பாதிக்கப்பட்ட மருதை தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில் தனக்கு இந்த வழக்கு குறித்து எந்த விவரமும் தெரியாது என்று மறுத்துள்ள எஸ்.பி. பாஸ்கரன், வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளருக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று விளக்கம் அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி எஸ்.பி அலுவலகத்தில் வங்கி பண மோசடி விவகாரத்தில் நடக்கின்ற போலீஸ் பஞ்சாயத்து வெளிச்சத்திற்கு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”
த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்
15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?
ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?
மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!
விஜயின் வி-சாலை மாநாடு... விவேகமும், வியூகமும் வெற்றிக்கு வழிவகுக்குமா...
காலை பத்தரை மணிக்கு வாயுக் கசிவால் மயக்கம்.. மாலை வரை மவுனம் ஏன் ?.. பள்ளிக்கு எதிராக போர்க்குரல்
கையில கருப்பு கயிறு “கட்ட அவிழ்த்து விடு”.. மாமியாரை குத்திய மருமகள்..! இரு கைகளிலும் கத்தியுடன் ஆக்ரோசம்...!
வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Advertisement
Posted Nov 01, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்

Posted Oct 31, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?


Advertisement