செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

100ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் காலமான எடின்பெரோ கோமகன்...

Apr 09, 2021 08:28:34 PM

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப் காலமானார். அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் சூரியன் மறையாத தேசம் எனப் பெயர் பெற்ற இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இரண்டாம் எலிசபெத் உள்ளார். இவரது கணவரும், எடின்பெரோ கோமகனுமான இளவரசர் பிலிப், தனது 99ஆவது வயதில் காலமானதாக, பிரிட்டன் அரச நிர்வாகத்தின் தலைமை பீடமான பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

கிரேக்க மற்றும் டென்மார்க் அரச குடும்பத்தின் வம்சாவளியில், கிரீஸ் நாட்டின் கோர்பூ தீவில் 1921ஆம் ஆண்டு பிறந்தார் பிலிப்.தனது 18ஆவது வயதில் பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் சேர்ந்த பிலிப், 1947ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் முடிந்து 6 வருடங்கள் கழித்து, 1953ஆம் ஆண்டு, பிரிட்டன் மாமன்னர் நான்காம் ஜார்ஜ் மறைவுக்குப் பின்னர், இங்கிலாந்து மகாராணியாக இரண்டாம் எலிசபெத் பட்டம் சூட்டப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இளவரசர் பிலிப், எடின்பெரோ கோமகன் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் - இளவரசர் பிலிப் தம்பதிக்கு, இளவரசர் சார்லஸ் உட்பட 3 மகன்களும், இளவரசி ஆனி என்ற மகளும் உள்ளனர். இளவரசர் வில்லியம் உட்பட 8 பேரக்குழந்தைகளும், 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு, தனது அரச பொறுப்புகளில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார். இதன்பின்னர், ராணி இரண்டாம் எலிசபெத்தோடு, பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டார்.

கடந்த சில மாதங்களாக இதயப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்ட இளவரசர் பிலிப், லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார்.

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் ((Windsor)) கோட்டையில் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் தங்கியிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை, இளவரசர் பிலிப், இயற்கை எய்தியதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வருகிற ஜூன் 10ஆம் தேதி தனது 100ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் இளவரசர் பிலிப் இயற்கையோடு கலந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..
தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!
வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement