அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஆன்-லைன் அல்லது ஆஃப்-லைன் ஆகிய ஏதேனும் ஒரு வகையில் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.
தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.