சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் இதுவரை 10 ரூபாயாக நடைமேடைச் சீட்டுக் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியபோதும் நெரிசலைத் தவிர்க்க நடைமேடைச் சீட்டு வழங்கப்படவில்லை. பயணச்சீட்டு வைத்திருப்போர் தவிர வேறு எவரும் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் ரயில்களில் ஏறவும் இறங்கவும் பிறரின் உதவி தேவை என்பதால் நடைமேடைச் சீட்டு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்துத் தெற்கு ரயில்வேயின் சென்னைக் கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய 6 பெரிய நிலையங்களில் மட்டும் நடைமேடைச் சீட்டு இன்று முதல் வழங்கப்படுகிறது.
50 ரூபாய் கட்டணத்துடன் வழங்கப்படும் நடைமேடை சீட்டு முறை ஜூன் 15 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.