சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் உறியடி விளையாட்டில் பங்கேற்றார்.
அங்குள்ள ஆதி ஆந்திரர் தெருவில் பொங்கலை முன்னிட்டு உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று, அமைச்சர் ஜெயக்குமார் உறியடிப் பானையை அடித்து உடைத்து, அப்பகுதி சிறுவர்களை உற்சாகப்படுத்தினார்.