அரசின் உத்தரவை மீறி 50% பார்வையாளர்களுக்கு மேல் செயல்படும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் திருநங்கைகளின் பரதநாட்டியம், கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, பேசிய அவர், யூடியூப்பில் ஆபாசத்தை பரப்பும் வகையிலான வீடியோக்கள் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.