செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பிசினஸ் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பாலிசி மாற்றங்கள் பொருந்தும் - வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

Jan 12, 2021 03:56:00 PM

வாட்ஸ்அப் செயலியில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகஊழியர்களுக்கு பயனாளர்கள் அனுப்பும் செய்திகளை தங்களால் பார்க்கவோ அழைப்புகளை கேட்கவோ இயலாது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி பாலிசியை அந்நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.

பிப்ரவரி 8ஆம் தேதி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் குறித்து எழுந்த சந்தேகங்களாலும், அதிருப்தியாலும் சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளுக்கு பலரும் மாறி வருகின்றனர்.

இந்நிலையில், பிசினஸ் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு மட்டுமே பிரைவசி பாலிசி மாற்றங்கள் பொருந்தும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றபடி, நண்பர்கள், குடும்பத்தினருக்கு அனுப்பப்படும் மெசேஜ்களின் அந்தரங்க தன்மையை எவ்விதத்திலும் பாதிக்காது என குறிப்பிட்டுள்ளது.

வதந்திகள் பரவியதால் விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், பிரைவேட் மெசேஜ்களுக்கும், குரூப் சாட்களுக்கும் என்கிரிப்சன் எனப்படும் ரகசியகுறியீட்டு முறை பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

என்கிரிப்சன் இருப்பதால் பயனாளர்களின் பிரைவேட் மெசேஜ்களை பார்க்கவோ, அழைப்புகளை கேட்கவோ வாட்ஸ்அப் நிறுவனத்தால் முடியாது என்றும், இதேபோல, ஃபேஸ்புக் நிறுவனமும் மெசேஜ்களை படிக்கவோ அழைப்புகளை கேட்கவோ முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

200 கோடி பயனாளர்களின் தகவல் தொடர்பு குறித்த விவரங்களை சேமித்து வைப்பது அந்தரங்க தன்மைக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் என்பதால், அந்த வேலையை தாங்கள் செய்வதில்லை என்றும், மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களே இதைச் செய்கின்றன என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

பயனாளர்கள் பகிரும் லொக்கேசன் விவரங்களையும் வாட்ஸ்அப் நிறுவனம் பார்க்காது என்றும், கான்டாக்ட் லிஸ்ட் விவரங்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட வேறு எந்த செயலியுடனும் பகிர்ந்து கொள்ளப்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Advertisement
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்
சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..
மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!
UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்
ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!
சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!
“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement