வாட்ஸ்ஆப்பின் புதிய சேவை நிபந்தனைகள் மற்றும் ரகசிய கொள்கைகளுக்கு பெரும் எதிர்ப்பு உருவாகி உள்ள நிலையில், டெலகிராம், சிக்னல் ஆகிய மெசேஜ் செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது.
பயனாளர்களின் போன் நம்பர் மற்றும் லொகேஷன் உள்ளிட்ட தரவுகள் இனிமேல் சேர்த்து வைக்கப்படும் என அறிவித்துள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், பயனாளர்களின் மீடியா தகவல்களையும் தனது சர்வர்களில் சேமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு வரும் 8 ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், வாட்ஸ்ஆப் கணக்கு நிரந்தரமாக நீக்கம் செய்யப்படும் எனவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த 2 நாட்களில் மட்டும் டெலகிராம், சிக்னல் செயலியை தரவிறக்கம் செய்துள்ளனர். வாட்ஸ்ஆப்பை தரவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 11 சதவிகிதம் குறைந்துள்ளது.