சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நெரிசல் அதிகமுள்ள நேரம் தவிர மற்ற நேரங்களில் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் பயணம் செய்வதற்கான தடை நீடிக்கிறது. அனுமதிக்கப்பட்ட நேரம் தொடங்குவதற்கு முன்பாக டிக்கெட் வழங்கப்படும் என்றும், பயணிகள் ஒரு வழிப் பயணத்திற்கு மட்டுமே டிக்கெட் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் யாரும் முகக்கவசம் அணியாமல் ரெயில் மற்றும் ரெயில் வளாகங்களுக்கு வரக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.