சென்னை தாம்பரத்தில் வாகன சோதனையின் போது தலையில்லாமல் இரு சக்கரவாகனம் ஓட்டி வந்தவரை கண்ட போக்குவரத்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஹாலோ மேன் ஸ்டைலில் வலம் வந்த இளைஞரின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக தலையில்லாமல் தொப்பி மற்றும் கூலிங்கிளாஸ் மட்டும் அந்தரத்தில் தொங்கிய நிலையில் மர்ம மனிதன் ஒருவர் கோட் ஷூட் அணிந்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தார்..!
வழக்கமாக தலையில் ஹெல்மெட் இல்லாமல் தான் வருவார்கள் ஆனால் இங்கே ஒருவர் தலையே இல்லாமல் வருகிறாரே என்று போக்குவரத்து போலீஸ்காரர் அதிர்ச்சியோடு நின்றார்.
அருகில் வந்த பின்னர் அவரது மோட்டார் சைக்கிளில் கொரோனா தடுப்பில் சிறப்பாண சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர், சுகாதாரத்துறையினர் மற்றும் ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வித்தியாசமான மேடைக்கலைஞர் மதன் குமார் என்பவர் வித்தியாசமான உடை அணிந்து வலம் வருவதாக கூறி போலீஸ் காரர் கையில் ரோஜாப்பூக்களை கொடுத்தார்.
அதே போல மற்றொரு இடத்தில் பைக்கிள் நின்ற அவரை கண்டு மக்கள் சற்று பீதியடைந்த மன நிலையில் விலகிச்சென்றனர்
அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் காரர் ஒருவருக்கு ரோஜாப்பூக்களை வழங்கி வணக்கம் விட்டு தியாகராய நகரை நோக்கி பயணித்தார் மதன்குமார்
விழிப்புணர்வு, ஏற்படுத்துவது, நன்றி தெரிவிப்பது எல்லாம் சரிதான், நம்ம ஊர் சாலையில் ஒழுங்காக வாகனம் ஓட்டிச்சென்றாலே எதிர்பார்க்காத விபத்து எல்லாம் நிகழ்கின்றது. முகத்தை மூடிக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் எதிர்பார்த்த விபத்து ஏதும் நிகழ்ந்துவிடபோகின்றது என்று அங்கு கூடியவர்கள் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.