திருநெல்வேலியில் உள்ள போத்தீஸ் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கிலோ காய்கறி 10 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் காய்கறிகளை வாங்க குவிந்தனர்.
திருநெல்வேலி வடக்கு ரத வீதியில் உள்ள போத்தீஸ் சூப்பர் மார்க்கெட், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட 10 வகையான காய்கறிகளை கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே குவிந்த மக்கள் முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இதில் பலர் முக கவசம் அணியாமல் வந்திருந்த நிலையில், அலைமோதிய கூட்டத்தை போத்தீஸ் நிர்வாகம் ஒழுங்கு படுத்தாமல் காய்கறி விற்பனையை நடத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.