சேலம் மாவட்டம் ஆத்தூர் புறவழிச்சாலையில் இரு வழிப் பாதையை இரவு நேரங்களில் ஒருவழிப்பாதையாக மாற்றியதால் நகரப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சேலம் - உளுந்தூர்பேட்டை வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை, ஆத்தூர், வாழப்பாடி, சின்ன சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருவழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
வேகமாக வந்த வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு 10 ஆண்டுகளில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதன் காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஒரு வழிப் பாதையாக காவல்துறையினர் மாற்றியுள்ளனர்.
சென்னை,கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் ஆத்தூர் நகர பகுதி வழியாக திருப்பி விடப்படுகிறது. புதுப்பேட்டை,காமராஜர் ரோடு உள்ளிட்ட சாலை வழியாக கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.