கொடைக்கானல் - பழனி நெடுஞ்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் நேற்றிரவு முதலே மிதமான மழை பெய்தது. இந்நிலையில் கோம்பைக்காடு அருகே கொடைக்கானல் - பழனி பிரதான நெடுஞ்சாலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நெடுஞ்சாலைதுறையினர் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இலகு ரக வாகனங்கள் மட்டும் அவ்வழியாக அனுமதிக்கப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.