2 நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக, வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலையின் அடிவாரமான அமிர்தி வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளப் பெருக்கு உருவாகி, நாகநதியில் கலந்து சீறிப்பாய்கிறது.
ஜவ்வாது மலையின் சிறு சிறு ஓடைகள் வழியாகப் பெருகிய மழைநீர் அமிர்தி வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளப் பெருக்காக உருவாகியுள்ளது.
காட்டாற்று வெள்ளம் கலந்து நாகநதி பொங்கிப் பெருகும் நிலையில், ஆற்றின் ஓரம் உள்ள கிராமங்களான கீழ் அரசம்பட்டு, மேல் அரசம்பட்டு, காளசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இளைஞர்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றின் அருகில் சென்று செல்போனில் படம்பிடிக்கவோ முயற்சி செய்ய வேண்டும் வேலூர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.