சென்னை அம்பத்தூரில் இருதரப்புக்கு இடையேயான கோஷ்டி மோதலில் ரவுடி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி.
இவரது சகோதரர் சீனிவாசன் அத்திப்பட்டு ஐசிஎப் காலனியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பரான சதீஷ் என்பவர் தனது வீட்டில் நகை காணாமல் போனது தொடர்பாக சீனிவாசனை சந்தேகித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சதீஷின் வீடு மற்றும் இருசக்கர வாகனத்திற்கு சீனிவாசன் தரப்பினர் தீ வைத்துள்ளனர்.
இந்நிலையில் தனது சகோதரர் சீனிவாசன் வீட்டிற்கு வந்த பாலாஜியை வழிமறித்த சதீஷ் தலைமையிலான கும்பல் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.