சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் குற்றவாளிகள் தப்பி ஓடியதால், 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அலுமினிய அச்சு தொழிற்சாலையில் திருடியதாக 17வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுவன் ஜாமீனில் சென்ற நிலையில் காவல்நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற மற்ற 4பேரை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயினும் பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக உதவி ஆய்வாளர்கள் அனிருதன், இளங்கோ, தலைமை காவலர்கள் சுரேஷ்பாபு, ரகுநாதன், கல்யாணசுந்தரம், கருணாகரன் என 6 பேரை 30 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து மேற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி ஐ.பி.எஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.