செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தொலைச்சி புடுவேன் தொலைச்சி...! பகிரங்க மிரட்டல் ஆடியோ..! மருத்துவரா? இல்ல மாஃபியாவா?

Nov 02, 2020 04:05:11 PM

பெரம்பலூரில் அரசு பெண் மருத்துவரை தற்காலிக பணியிட மாற்றம் செய்த மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனரை, செல்போனில் தொடர்பு கொண்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் மிரட்டும் தொனியில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை தேவைக்கு ஏற்ப தற்காலிக பணியிடமாறுதல் செய்வது வழக்கமான நடைமுறை.

அந்த வகையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்து கடந்த நான்கு மாதங்களாக பொது மருத்துவ பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் கிருத்திகா என்பவரை, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு தாலுகா பொது மருத்துவமனையில் பணிபுரிய 6 நாட்கள் மட்டும் தற்காலிக பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

இதற்கான உத்தரவை பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திருமால் பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவை மதிக்காமல், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்ல மறுத்த டாக்டர் கிருத்திகா, மருத்துவ விடுப்பு எடுத்துச்சென்று விட்டார்.

பின்னர் தான் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் அர்ஜூனன் என்பவரிடம் கிருத்திகா சிபாரிசுக்கு சென்றுள்ளார்.

அர்ஜூனனின் சிபாரிசை ஏற்க மறுத்த திருமால், தனது உத்தரவை மதித்து ஒரு நாளாவது ஜெயங்கொண்டத்தில் பணிபுரிய சொல்லுங்கள், மீண்டும் பழைய இடத்திற்கு பணியிட மாறுதல் உத்தரவில் கையெழுத்திடுகிறேன் எனக் கூறியுள்ளார்

இதனைத் தொடர்ந்து  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர்.செந்தில் என்பவர், பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமாலை செல்போனில் தொடர்பு கொண்டு, கிருத்திகாவின் தற்காலிக பணியிட மாறுதல் தொடர்பாக அதிகார தொனியில் பேசி மிரட்டியதாக கூறப்படுகின்றது.

செந்திலின் இந்த மிரட்டல் தொடர்பாக ஆடியோ ஆதாரத்துடன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, மருத்துவ பணிகள் இயக்குனரகத்திற்கும் எழுத்து பூர்வ புகார் ஒன்றை அனுப்பி உள்ளார் திருமால்.

மருத்துவர்கள் பணியிடமாறுதல் தொடங்கி பல்வேறு வகைகளில் செந்தில் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் செந்திலை தொடர்பு கொள்ள இயலவில்லை.

இந்த மிரட்டல் சம்பவத்தின் ஆடியோ அரசு மருத்துவர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

இதனிடையே பிரச்சனைக்குக் காரணமான மருத்துவர் கிருத்திகா, தாம் இடமாற்றம் செய்யப்பட்ட ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்குச் சென்று பணியில் சேர்ந்திருக்கிறார்.

ஒரு நாள் கூட அங்கு பணி செய்ய முடியாது என்று மருத்துவ விடுப்பில் சென்ற கிருத்திகா, டாக்டர் செந்தில் - டாக்டர் திருமால் இடையிலான உரையாடல் வெளியான நிலையில் வேறு வழியின்றி அங்கு பணிக்குத் திரும்பி இருக்கிறார். 


Advertisement
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..
தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!
வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement