தூத்துக்குடி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர், இறந்துபோன தனது மனைவிக்கு சிலை வைத்து வணங்கி வருகிறார். முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த மாடசாமி என்ற அந்த முதியவர், ராணுவத்தில் 15 ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
மனைவி வள்ளியம்மாள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்த மாடசாமி, கடந்த 2014ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் அவர் இறந்த பின் 8 லட்ச ரூபாய் செலவில் அவருக்கு சிலை வடித்துள்ளார்.
சிலை தனியாக இருக்கக்கூடாது என்பதற்காக அந்த சிலை அருகே தனக்கும் ஒரு சிலையை வடித்துள்ள மாடசாமி, நாள்தோறூம் காலை எழுந்ததும் மனைவியின் சிலையை வணங்கியபின் தான் தனது வேலைகளைத் தொடங்குவதாகக் கூறுகிறார்.