ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவும் அவசியமானதாகும்.
உடலுக்கும், மனதிற்கும் பொருந்தும் ஆரோக்கியமான, பாதுகாப்பான உணவு என்ற கருப்பொருளை கொண்டு உணவு பாதுகாப்பு துறை முக்கிய அம்சங்களை வணிகர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னையில் ஈட் ரைட் என்ற நிகழ்வு தனியார் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்டது.
இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, சமையல் கலை நிபுணர் தாமு, திரைப்பட நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஈட் ரைட் தொடர்பான லோகோவும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அனைத்து இடங்களிலும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நிகழ்ச்சியில் சமையல் கலை நிபுணர் தாமு சமைத்த பாரம்பரிய உணவுகளை , மாவட்ட ஆட்சியரும், நடிகை நிக்கி கல்ராணியும் ருசித்தனர்.
தினமும் ஒரு கீரை என்ற அடிப்படையில் அன்றாடம் நம் உணவில் மருத்துவ குணம் படைத்த கீரைகளை எடுத்து கொண்டால், மனித இனத்தை அச்சுறுத்தும் பல்வேறு நோய்களை விரட்டி அடிக்கலாம் என்கிறார் நல்லகீரை ஜெகநாதன்...
உணவு கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக 673 சிவில் வழக்குகளும், 293 கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு சுமார் 45 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.