சென்னையில் சனிக்கிழமை புதிதாகத் திறக்கப்பட்ட மதுபான பார் ஒன்றில் பெண்கள் ஆபாச உடையுடன் வலம் வர, தனிநபர் இடைவெளியின்றி போதை ஆசாமிகள் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
ஆயிரம் விளக்குப் பகுதியில் ஹென் காக் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள அந்த பாரில் திறப்பு விழாவை முன்னிட்டு முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு குவிந்தவர்கள், மது போதையில் குத்தாட்டம் போட்டனர். பெண்கள் சிலர் அரைகுறை ஆடையுடன் வலம் வந்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பார்களை திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படாத நிலையில், இந்த பார் திறக்கப்பட்டது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.