நாகை அருகே சாலை விதியை மீறி ராங் சைடில் வந்து லாரியின் பின்பக்கத்தில் இடித்த ஷேர் ஆட்டோவால் தனது 2 விரல்களை இழந்த பயணி ஒருவர் அவற்றை சாலையில் தேடிய பரிதாபம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது விதியை மீறி ராங் சைடில் (wrong side) வந்த ஷேர் ஆட்டோ லாரியின் பின்பக்க பக்கவாட்டிலும், பின்னர் 2 இருசக்கர வாகனங்களிலும் மோதியது.
விபத்தில் ஆட்டோவில் பயணித்த நபர் ஒருவரின் 2 கைவிரல்கள் துண்டாகி கீழே விழுந்தன. அவற்றை அந்த பயணி தேடிய பரிதாபம் அரங்கேறியது.