செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சி.எம்.சி மருத்துவமனை பெயரில் மோசடி.. போலி மருத்துவர் கைது

Oct 11, 2020 09:58:38 AM

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் வேலை என்று ஓ.எல்.எக்சில் விளம்பரம் கொடுத்து ஆண் குரலிலும் பெண் குரலிலும் மாற்றி மாற்றி பேசி பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர்மாவட்டம்,காட்பாடியை அடுத்த கல்புதூரைச் சேர்ந்த அனிதா, வணிக மேலாண்மை படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் வரும் வேலை வாய்ப்பு பகுதியை ஆராய்ந்தபோது, சி.எம்.சி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்கள் இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது.

அதில் காணப்பட்ட செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது உதயகுமார் என்ற நபர், தன்னை சி.எம்.சி மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் என அறிமுகம் செய்து பேசியுள்ளான்.

மருந்தகப் பிரிவில் அனிதாவுக்கு வேலை இருப்பதாகவும் அதற்கு 50 ஆயிரம் செலவாகும் எனக் கூறியவன், தாமே விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருவதாகவும் கூறியுள்ளான்.

அதன்படியே கடந்த மாதம் அனிதாவின் வீட்டுக்குச் சென்ற உதயகுமார், சி.எம்.சி மருத்துவமனை பெயரில் போலியாக அச்சடிக்கப்பட்ட விண்ணப்பத்தைக் காட்டி பூர்த்தி செய்யக் கூறியுள்ளான்.

பின்னர் 3 தவணைகளாக அனிதாவிடம் 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளான்.

இடையில் அனிதா சந்தேகம் கொண்டு வேலை குறித்து கேட்டபோது, அதே மருத்துவமனையில் சக மருத்துவராகப் பணிபுரிவதாக சித்தரித்து உஷாராணி என்ற பெயரில் உதயகுமாரே பேசியுள்ளான்.

உதயகுமார் குறிப்பிட்ட தேதியில் சி.எம்.சி மருத்துவமனைக்கு நேரில் சென்று அனிதா விசாரித்தபோது, அப்படிப்பட்ட பெயர்களில் இங்கு மருத்துவர்கள் யாரும் இல்லை என கூறியுள்ளனர்.

அதிர்ச்சியடைந்த அவர், உதயகுமாரின் எண்ணுக்கு அழைத்தபோது, அது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனிதா, உடனடியாக போலிசில் புகாரளித்துள்ளார்.

அதன்பேரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், கீழ்மணவூரைச் சேர்ந்த உதயகுமாரை கைது செய்தனர். விசாரணையில் அவன் மீது ஏற்கனவே 2016ஆம் ஆண்டு 2 மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இணையதளங்களில் கவர்ச்சிகரமாக வரும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை அப்படியே நம்பிவிடாமல், தீர விசாரிக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

அதேசமயம் பணம் கொடுத்து குறுக்கு வழியில் பெற நினைக்கும் எந்த வேலையும் சட்டத்தின் பார்வைக்கு வரும்போது ஆபத்தில் முடியும் என்றும் எச்சரிக்கின்றனர்.


Advertisement
கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!
ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..

Advertisement
Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..


Advertisement