சேலம் மாவட்டம் மேட்டூர் ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசி டிவி காட்சி, வெளியாகி உள்ளது.
மேட்டூர் - சேலம் இடையேயான 2- ஆவது இருப்புப் பாதை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வந்தது. அப்போது,புதுச்சாம்பள்ளி கிராஸ் ரோடு அருகே மழையில் நனைந்திருந்த பழைய சுற்றுச்சுவர், திடீரென இடிந்து, பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்தில் கவிதா என்ற பெண் உயிரிழந்தார்.
காயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர், மேட்டூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக் கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மற்றும் ரயில்வே போலீஸ் உயரதிகாரிகள் நிகழ்விடம் வந்து விசாரணை நடத்தினர்.