செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொசுவலையுடன் சென்ற வேளான் புலிகளிடம் சிக்காத வெட்டுக்கிளிகள்..! 5 மணி நேர ராஜதந்திரம் வீண்

Aug 21, 2020 07:32:42 AM

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சோளம் மற்றும் மாட்டுத்தீவனப் பயிர்களை வேட்டையாடிய ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகளை பிடிக்க கொசுவலையுடன் வேளாண்துறை அதிகாரிகள் களம் இறங்கினர். பல மணி நேரம் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் வெட்டுக்கிளிகளிடம் பலிக்காமல் போனது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த புதூரைச் சேர்ந்தவர் விவசாயி சரவணன். இவரது தோட்டத்திற்குள் புகுந்த ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அங்கு அரை ஏக்கரில் பயிரிட்டப்பட்டிருந்த சோளப்பயிர்களை தின்று அளித்து விட்டதாக தகவல் வெளியானது. அங்குள்ள வெட்டுக்கிளிகளை பிடித்து ஆய்வு செய்ததில் அவை உள்நாட்டு வெட்டுக்கிளிகள் தான் என்றும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை என்றும் விவசாயிகளுக்கு அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் புதூரில் கால்நடை தீவனப்பயிர் பயிரிடப்பட்ட தோட்டத்திற்குள் புகுந்து வெட்டுக்கிளிகள் பயிர்களை வேட்டையாட தொடங்கியதால், அவற்றின் அட்டகாசம் குறித்து மாவட்ட வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கொசுவலையுடன் வந்த வேளாண் அலுவலர்கள், வலை விரித்துப் பிடித்தபடி தோட்டத்தின் ஒரு பக்கத்தில் நின்று கொண்டு, மற்றவர்களை தோட்டத்திற்குள் இறங்கி வெட்டுக்கிளிகளை விரட்டி வரும்படி கூறினர்.

அவர்கள் ஆடுமாடுகளை விரட்டுவது போல சத்தமிட்டபடியே விரட்டி வந்து பார்த்தனர். வலையில் எதுவும் சிக்கியதாக தெரியவில்லை. அத்தனை வெட்டுக்கிளிகளும் தோட்டத்துக்குள்ளேயே பதுங்கி கொண்டு, இவர்களின் சல சலப்புக்கு அஞ்சாமல், தொடர்ந்து மாட்டுத்தீவனப் பயிர்களை வேட்டையாடியபடி இருந்தன.

வெற்று வலையுடன் மீண்டும் அதே இடத்தில் நின்றபடி வெட்டுக்கிளிகளை வலையைத் தேடி வரவைக்க 5 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயின.

வேளாண் அலுவலர்களின் இந்த வினோத டெக்னிக் கைகொடுக்காமல் போன நிலையில், கையால் பிடித்த 30 வெட்டுக்கிளிகளை மட்டும் பாட்டில் ஒன்றில் ஒன்று அடைத்து ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.

கொசுவலையைக் கொண்டு வெட்டுக் கிளிகளைப் பிடிப்பது வியட்னாம் நாட்டில் காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் முறை என்றும், தோட்டத்தில் வெட்டுக்கிளிகள் புகுந்தால் வியட்நாம் பாணியில் கொசுவலையுடன் நின்று பிடிக்குமாறும் அறிவுரை வழங்கிச்சென்றனர்.

உண்மையில் வியட்னாம் நாட்டில் இப்படித்தான் வெட்டுக்கிளிகள் பிடிக்கப்படுகின்றனவா என்று ஆய்வு செய்த போது வேளாண் துறையினரின் சோம்பல் தனம் வெளிச்சத்திற்கு வந்தது.

வியட்நாமில், வயல் வெளிகளில் உள்ள வெட்டுக்கிளிகளை சமைத்து உண்பதற்காக கொசுவலைகளை வைத்து பிடிப்பது அவர்களது வழக்கம். அந்தவகையில் பெரிய அளவிலான கொசு வலைகளை பிடித்தபடி இருவர் வயல் முழுவதும் விடாமல் தொடர்ச்சியாக ஓடிச்சென்று வெட்டுக்கிளிகளை வலையில் சிக்க வைக்கின்றனர்

ஆனால் இங்கோ, ஒரே இடத்தில் நின்று கொண்டு வெட்டுக்கிளிகளை ஆட்டுக்குட்டிகள் போல தங்கள் வலைக்குள் வரவைக்க நினைத்ததால் வெட்டுக்கிளிக்கு விரித்த வலை வெற்றாகிபோனது என்கின்றனர் விவசாயிகள்.

அதே நேரத்தில் வெட்டுக்கிளிகளின் வேட்டைக்காடாக தமிழக விவசாய நிலங்கள் மாறுவதற்கு முன்பாக வேளான் அதிகாரிகள் உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பர்ப்பு.


Advertisement
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..
தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!
வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement