செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பல்துறை வித்தகர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள்..!

Aug 07, 2020 12:04:32 PM

தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவுநாள். பல்துறை வித்தகரான கலைஞரை நினைவுகூரும் ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காண்போம்...

கலைஞரின் அனல்பறக்கும் வசனங்களை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியாது. பராசக்தி திரைப்படத்தில் தொடங்கிய கலைஞரின் கலைப்பயணம், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

மறக்க முடியுமா, மனோகரா, அரசிளங்குமரி, ரங்கூன் ராதா, மலைக்கள்ளன் போன்ற படங்களின் வசனங்கள் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவை. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் தொடங்கி பிற்காலத்தில் வந்த நடிகர்-நடிகைகள் வரை ஏராளமானோர் கலைஞரின் வசனங்களை பேசி நடித்துள்ளனர்.

1950களில் ஆட்சியில் இருந்த காங்கிரசை வீழ்த்தவும், தி.மு.க.வை மாபெரும் கட்சியாக வளர்க்கவும் பெருமுயற்சி மேற்கொண்ட கலைஞர், அண்ணா மறைவுக்குப் பின் கட்சித் தலைவராகத் தேர்வானார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. தொண்டர்களை வழிநடத்திய கலைஞர், இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற திராவிடக் கொள்கைகளில் வாழ்நாள் முழுவதும் உறுதியாக இருந்தார்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர், இலக்கியவாதி, திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முக வித்தகராகத் திகழ்ந்த கலைஞர் முத்தமிழ் அறிஞராகப் போற்றப்பட்டார்.

இலக்கணம், இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் ஏராளமான நூல்களை எழுதிய அவர், கட்சித் தொண்டர்களுக்காக ஆயிரக்கணக்கான கட்டுரைகளையும், கடிதங்களையும் எழுதியுள்ளார். தமது கணீர்ப் பேச்சால் லட்சக்கணக்கான மக்களை தம்வயப்படுத்தியவர் கலைஞர்.

50 ஆண்டுகள் கட்சித் தலைவர், 5 முறை முதலமைச்சர், 13 முறை சட்டமன்ற உறுப்பினர்.... இப்படி பல பொறுப்புகளை வகித்தபோதும் எழுத்துப்பணியை விடவே இல்லை.

தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார் கலைஞர். அன்று முதல் இன்று வரை லட்சக்கணக்கான மக்கள் இத்திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.

அவரது நீண்ட, நெடிய பயணம் இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் நிறைவுபெற்றாலும், தமிழக மக்களால் என்றென்றும் பேசப்படும் தலைவராக விளங்குகிறார் கலைஞர்.


Advertisement
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்
சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..
மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!
UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்
ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!
சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!
“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்


Advertisement