செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மதுரைக் காரனாக வேஷம் கட்டிய இலங்கைக்காரன்..! உதவிக்கரம் நீட்டிய பெண்

Aug 06, 2020 08:09:11 AM

கோயம்புத்தூரில், காதலியால் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்படும் சிங்கள தாதா அங்கட லொக்கா போலியான ஆதார் அட்டையுடன் மதுரையில் 3 மாதம் தங்கி இருந்தது தெரியவந்தது. அகதிகள் முகாமில் தங்கி இருந்த பெண் வழக்கறிஞரின் தந்தை பலவகையில் உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

துபாயில் இருந்து போலியான பாஸ்போர்ட் மூலம் ஆள்மாறாட்டம் செய்து இந்தியாவிற்குள் புகுந்தவன் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சிங்கள தாதா அங்கட லொக்கா. கோயம்புத்தூரில் காளப்பட்டியில் காதலி அமானி தான்ஜியுடன் தங்கி இருந்த அங்கட லொக்காவை கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி விஷம் வைத்து கொலை செய்து, மாரடைப்பில் மரணமடைந்ததாக போலியான ஆவணங்களை கொடுத்து சடலத்தை பெற்றுச்சென்று மதுரை கூடல் நகர் அருகே தகனம் செய்ததாக கூறப்படுகின்றது.

அங்கட லொக்கா மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினரின் தனிப்படையினர், அங்கட லொக்காவின் சடலத்தை ஏமாற்றி வாங்கிச்சென்ற மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் பின்னணி குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

வழக்கறிஞர் சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன் பல ஆண்டுகளாக கூடல்நகர் இலங்கை அகதிகள் முகாமில் தேனீர் கடை நடத்தி வந்தவர். ஆனால் கடந்த சில இரு வருடங்களில் பாலசிங்கபுரம், ரயிலார் நகர் என வீடு மாறிச்சென்றவர், கடந்த 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 வீடுகள் மாறியது தெரியவந்துள்ளது.

இதனிடையே, தான் தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தான், தாதா அங்கொடா லொக்காவை, சிவகாமி சுந்தரி தங்கவைத்தது தெரியவந்துள்ளது. வீட்டு உரிமையாளரிடம் சிலிண்டர் வாங்க வேண்டும் என ஏமாற்றி குடும்ப அட்டையை பெற்று அதனை பயன்படுத்தி அங்கட லொக்காவுக்கு மதுரையை சேர்ந்த பிரதீப் சிங் என்ற பெயரில் என போலி ஆதார் அட்டையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதன்மூலம் 3 மாதம் இலங்கை தாதா அங்கட லொக்கா மதுரைக்காரன் போல அங்கு தங்கி இருந்ததும் அவனை சந்திக்க அவ்வப்போது சிலர் கார்களில் வந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகாமி சுந்தரியின் தந்தை தினகரன் மற்றும் தாய் பாண்டியம்மாளிடமும் சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தியதில், துபாயில் இருந்து வந்த பிரமுகர் மூலம் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரிக்கு அங்கொடா லொக்கா அறிமுகமானதாகவும், அந்த துபாய் நபர் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப, பணத்தை பெற்றுக் கொண்டு பல்வேறு உதவிகளை செய்துகொடுத்ததாக தந்தை தினகரன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாமி சுந்தரி அரை கிராம் தங்கம் வாங்க கூட காசில்லாமல் அவதிப்பட்டவர் எனவும், அங்கட லொக்கா சகாக்களுடன் ஏற்பட்ட தொடர்புக்கு பின்னர் கார் வீடு சொகுசான வாழ்க்கை என தடம் மாறியதாக பக்கத்து வீட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகாமி சுந்தரியின் வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலிசார் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து முறைகேடாக பணபரிமாற்றம் நிகழ்நநண்பர்கள் குறித்தும் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதற்கிடையே உடல்கூறாய்வின் போது அங்கட லொக்காவின் சடலத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மூலம் கொல்லப்பட்டது அவன் தானா என்பதை உறுதி செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் கொடுத்தால் போதும், சர்வதேச கடத்தல்காரனுக்கு சர்வமும் கிடைக்கும் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த சம்பவம்.


Advertisement
ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்
“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்
சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..
மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”
தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!
எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!
UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்
ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!
சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!
“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement