சென்னை அடுத்த புழல் அருகே வீட்டு வாடகை விவகாரத்தில், காவல் ஆய்வாளர் தாக்கியதால் மனமுடைந்த நபர், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்ளும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த 1-ம் தேதி புழல் அடுத்த விநாயகபுரத்தில் வீட்டு உரிமையாளர் அளித்த புகாரில் வாடகைக்கு குடியிருந்த ஓட்டேரியை சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவரை காவல் ஆய்வாளர் பென்சாம் தாக்கியதாக சொல்லப்படுகின்றது.
இதனால், மனமுடைந்த பெயிண்டர் சீனிவாசன் குடிபோதையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துக் கொண்டார். சீனிவாசன் அளித்த வீடியோ வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் உயிரிழந்த நிலையில், மனைவியின் கண்முன்னே அவர் தீக்குளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மனைவி தீயை அணைக்க எவ்வளவோ முயன்றும், கட்டுக்கடங்காமல் தீ அவரது உடல் முழுவதும் பரவியது.