செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

பனை தரும் பணம்... கை கொடுத்த தொழில்

Jul 30, 2020 11:02:30 AM

கொரோனா ஊரடங்கு காலத்தில் 11ஆவது வகுப்பு மாணவர் ஒருவர், தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு உதவும் வகையில், பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அசத்தும் மாணவர் குறித்து அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு : -

ஒல்லியான வலுவான தேகம் - இடுப்பில் கயிறுடன் சொருகி வைக்கப்பட்ட அரிவாள் சகிதம் அதிகாலை இரு சக்கர வாகனத்தில் பனை ஏறும் தொழிலுக்கு புறப்படுகிறார், இந்த 18 வயது இளைஞர் கிருஷ்ண பெருமாள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளஅரசர் குளத்தைச் சேர்ந்த உப்பு வியாபாரி பாலகிருஷ்ணன் என்பவரின் மகனான கிருஷ்ண பெருமாள், 11ஆவது வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாய் ஈட்ட, இவர் தனது தாத்தாவின் தொழிலை கையிலெடுத்துள்ளார்.

கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்து நிறைந்த பனை ஏறும் தொழிலில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் கிருஷ்ண பெருமாளுக்கு அவரது தங்கை கண்ணகி உதவி வருகிறார். பனை யேறும் தொழிலில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதாக கூறும் கிருஷ்ண பெருமாள், இத் தொழிலில் இளைஞர்களை பங்கேற்க, ஊக்குவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மாணவர் கிருஷ்ண பெருமாள், நாளொன்றுக்கு 5 பனை மரங்கள் ஏறுகிறார். அவரது தங்கை கண்ணகி, பனையில் இருந்து இறக்கும் பதநீரை காய்ச்சும் இடத்திற்கு எடுத்துச் சென்று, கருப்பட்டி தயாரிக்க உதவுகிறார். இவ்வாறு தயாராகும் கருப்பட்டிகளை விற்பனை செய்வதின் மூலம் கிடைக்கும் பணம், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ள தங்கள் குடும்பத்திற்கு உதவியாக இருப்பதாக கண்ணகி தெரிவித்தார்.

தமிழகத்தின் மாநில மரம் ஆக பனை மரம் இருந்த போதிலும், இதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பனை ஏறும் தொழிலும் அழிந்து வருகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த தொழிலில் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என்பது நிதர்சனம்.

குறிப்பாக, இன்சூரன்ஸ் வசதியோ - பாதுகாப்பு உபகரண வசதியோ கிடையாது. எனவே, அழிந்து வரும் பனை ஏறும் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இத் தொழிலை நம்பி இருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.


Advertisement
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..
தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கிய கஸ்தூரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்..! சிங்கிள் மதர் கோஷம் எடுபடவில்லை..
எலி மருந்து விவகாரம் இதை மட்டும் செய்யாதீங்க... மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..!
வரலாற்று வெற்றி பெற்ற அதிபரின் கட்சி.. இலங்கையில் என்.பி.பி.க்கு ஆதரவான அலை தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? 159 இடங்களில் வென்று அதிபர் கட்சி சாதனை தேசிய கட்சிக்கு வாக்களித்த தமிழர்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement