சென்னை தியாகராயநகரிலுள்ள கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறும் வகையிலும், கொரோனா பரவல் விழிப்புணர்வு இல்லாமலும் மக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர்.
முக்கிய வியாபார பகுதிகளில் ஒன்றான அங்கு ஜவுளி கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், நகைகடைகள், சிறிய கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த அக்கடைகள், ஏசி இயங்க கூடாது என்பது உள்ளிட்ட வழிகாட்டுதலுக்கு உட்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
ஆடி மாதத்தையொட்டிய வழக்கமாக வெளியிடும் தள்ளுபடி அறிவிப்பை ஜவுளி கடைகள் வெளியிட்டுள்ளன. இதனால் ஜவுளி கடைகளிலும், ஜவுளி கடையோடு கூடிய சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் குடும்பமாக மக்கள் கடைகளுக்கு வந்திருந்தனர். பெரிய கடைகளில் சானிடைசர், தெர்மல் ஸ்கேனிங் வசதி செய்யப்பட்டிருந்தபோதிலும் சிறிய கடைகளில் அந்த வசதி இல்லை.