சென்னையை தொடர்ந்து சேலத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த கறுப்பர் கூட்டம் நாத்திகன் மீது கலவரத்தை தூண்டியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து நாத்திகன் என்ற பெயரில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், சேனல் நிர்வாகி செந்தில்வாசன், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வீடியோவில் முருகப்பெருமானின் “வேல்” குறித்து ஆபாசமாக திருவாய் மலர்ந்த சுரேந்திரன் தற்போது புழல் ஜெயிலில் மூன்று வேளையும் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான். குட்டிக்கடை போல செயல்பட்டு வந்த அவனது அலுவலகத்தை இழுத்து பூட்டி மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
இதற்கிடையே கருப்பர் தேசம் என்ற பெயரில் அவன் நடத்தி வந்த யூடியூப் சேனல் ஆபாச வீடியோக்களை நீக்கியதோடு செனகல் வேர்ல்டு என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் ஜலகண்ட புரம் காவல் நிலையத்தில் கறுப்பர் கூட்டத்தின் ஆபாச வீடியோவுக்கு எதிராக புகார் அளித்த குணசேகரன் பட்டாச்சாரியார் என்பவர், தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட சுரேந்திரன் மற்றும் சேனல் நிர்வாகி செந்தில்வாசன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து சுரேந்திரன், மற்றும் சுந்தர்ராஜன் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சுரேந்திரனை இந்த வழக்கில் மீண்டும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாச விமர்சன வீடியோவை சுரேந்திரன் கோஷ்டி பயத்தில் நீக்கிய நிலையில், இந்து மத கடவுள்களை ஆபாசமாக விமர்சித்த சர்ச்சைக்குரிய மற்ற வீடியோக்களுடன் இயங்கி வரும் அந்த யுடியூப் சேனலை முற்றிலும் முடக்க காவல்துறையினர் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக, திமுக என பல்வேறு தரப்பில் இருந்தும், கறுப்பர் கூட்டத்திற்கு எதிரான கண்டன குரல்கள் வேல் போல் பாய அதிர்ந்து போய் கிடக்கின்றது கறுப்பர் கூட்டம்.