செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கொரோனா உறுதியான நிலையில் ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து பக்கோடா வாங்கிய பெரியவர்..! சிகிச்சைக்கு செல்லும் முன் அலட்சியம்

Jul 15, 2020 08:45:27 AM

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பெரியவர் ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் முன்பாக ஆம்புலன்சை காத்திருக்க வைத்து விட்டு, மிட்டாய் கடையில் பக்கோடா வாங்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் அரங்கேறிய அலட்சிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 824 ஐ தொட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 103 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த நிலையில் புளியங்குடியில் 40 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியான சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பழைய மார்க்கெட் பகுதியை சேர்ந்த ஒரு பெரியவருக்கும் இரு பெண்களுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர்களை அழைத்து செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் சாலையில் காத்திருக்க, தங்களுக்கு தேவையான உடமைகளை பைகளில் எடுத்துக் கொண்டு 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக நடந்து சென்றனர். அவர்களுடன் காவலர் ஒருவரும் சென்றார்

இதில் கடைசியாக கட்டை பையை தூக்கிக் கொண்டு சென்ற பெரியவர், ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்த தோடு உடன் வந்த காவலரை தனது கட்டை பைக்கு காவலாக நிறுத்தி விட்டு அருகில் இருந்த மிட்டாய்க்கடைக்கு சென்றார். அங்கு பக்கோடாவை பெரிய பார்சலாக கட்டி வாங்கிக் கொண்டு தனது பையில் பத்திரமாக வைத்தார்.

இதனை உடன் வந்த சுகாதார அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மிட்டாய் கடை அருகில் நின்ற பொதுமக்களும் சர்வசாதாரணமாக பெரியவருக்கு அருகில் நின்று கொண்டு இருந்தனர். ஒருவர் பெரியவர் கீழே தவறவிட்ட பைசாவை எடுத்து அவரிடம் வழங்கினார். இதில் ஒரே ஆறுதல் பெரியவர் கையில் கையுறை அணிந்திருந்ததும், அருகில் நின்ற அனைவருமே முக கவசம் அணிந்திருந்ததும் தான்.

கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை கடை பிடிக்கவும், வீட்டிலிருக்கவும், தனித்திருக்கவும் அறிவுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட பெரியவர், ஆம்புலன்ஸை காத்திருக்க வைத்து விட்டு பக்கோடா வாங்கிச் சென்ற சம்பவம் அலட்சியத்திற்கு சாட்சியாக பார்க்கப்படுகின்றது.

பக்கோடா சாப்பிட்டாலோ... பாராசிட்டமால் சாப்பிட்டாலோ கொரோனா குணமாகாது, உரிய முன் எச்சரிக்கைகளை பின்பற்றி முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே குணமாகும் என்பதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்..!


Advertisement
கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..
50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..
லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!
திருட வந்து கிணற்றுக்குள் விழுந்த திருடன்..! உதவி செய்த ஹவுஸ் ஓனர்..!
"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..
கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...
உதயநிதிக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவரை விட சிறப்பாக இருக்க வேண்டும்.. விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறிய அமைச்சர் பொன்முடி
வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!
ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement