செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

புலி இழந்தால்.... புவி இழப்போம்

Jul 12, 2020 08:27:25 AM

இந்தியாவின் தேசிய விலங்கான புலிகள் பற்றிய கணக்கெடுப்பு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது, இந்தச் சாதனை எப்படி நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு. 

அழகும், அறிவும், ஆக்ரோஷமும், கம்பீரமும் சேர்ந்த விலங்கான புலி, இந்தியாவின் தேசிய விலங்காக உள்ளது. உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ள புலிகள், உலகம் முழுவதும் உள்ள வேட்டையாடிகளால் வரைமுறையின்றி வேட்டையாடப்பட்டதால் தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக உலாவி வருகின்றன.

முற்றிலுமாக அழிந்துவிட்ட புலி இனங்களான பாலி புலி, ஜாவா புலி, கேஸ்பியன் புலி ஆகியவற்றைப் போலவே தற்போது வாழ்ந்துவரும் புலி இனங்களும் அருகி வரும் இனங்களாக உள்ளன. உலகில் உள்ள மொத்த எண்ணிக்கையில் 70 விழுக்காடு புலிகளை கொண்டது இந்தியா.

ஆனால் மற்ற இடங்களை விட இந்தியாவில் புலிகள் வேட்டை சில ஆண்டுகளுக்கு முன் அதிகரித்திருந்த நிலையில் தற்போது அவை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான் கடந்த 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு முறை உலக சாதனை படைத்துள்ளது.

பொதுவாக வனவிலங்குகள் கணக்கெடுப்பு என்பது நேரடி கணக்கெடுப்பு மற்றும் மறைமுகக் கணக்கெடுப்பு என வனத்துறையினர் பிரித்து வைத்துள்ளனர். தமிழகக் காடுகள் பெரும்பாலும் அடர்த்தியாக இருப்பதால் இங்கு நேரடியாக புலிகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாக உள்ளது.

அதற்கு பெரிதும் உதவுவது மறைமுகக் கணக்கெடுப்பே. முதலாவதாக புலிகளின் கால்தடத்தைக் கண்டறிந்து அதில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கரைசலை ஊற்றி வார்த்தெடுத்து அதன் மூலம் புலி குறித்த தகவல்களைப் பெறமுடியும்

இதனைப் போலவே புலியின் எச்சத்தை கண்டறிந்து, பின்னர் அதனை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்துவதன் மூலமும் புலிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.  இது தவிர தங்கள் நகங்களை கூர்மையாக்கவும், அதில் சிக்கியுள்ள இறைச்சித் துணுக்குகளை அகற்றவும் குறிப்பிட்ட சில மரங்களில் புலிகள் பிறாண்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும். அதுபோன்ற பிறாண்டல் அந்த மரத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும். இதன் மூலமும் வனத்துறையினர் புலிகளைக் கணக்கெடுப்பது வழக்கம்.

இதனைப் போலவே தங்கள் எல்லையைக் குறிப்பதற்கும், பெண் புலிகளை ஈர்ப்பதற்காகவும் ஆண் புலிகள் ஆங்காங்கே சிறுநீரை கழித்து விட்டுச் செல்லும்.  இவை அனைத்தையும் விட துல்லியமாகவும், வேகமாகவும் கணக்கிடுவதற்கு கேமரா ட்ராப்பிங் முறை கையாளப்படுகிறது.

அதாவது மேற்கூறிய அத்தனை தரவுகளும் வந்த பின்னர் புலிகள் நடமாடும் இடங்களில் இரவிலும் படம் பிடிக்கும் வசதி கொண்ட நவீன கேமராக்களை பொருத்தி அதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை, பாலினம், வயது உள்ளிட்ட விபரங்களைப் பெறமுடியும். ஒரு முறை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதன் துல்லிய முடிவுகள் வெளிவர 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம் என்கின்றனர் வனத்துறையினர்.

இத்தனை அரும்பாடுகளுக்கு நடுவேதான் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால்தான் கடந்த 2010ம் ஆண்டு ஆயிரத்து 706 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2018ல் 2967 ஆக உயர்ந்துள்ளது.

இதைத்தான் இந்தியாவில் புலிகளை எண்ணுவதற்கு கடைபிடிக்கப்பட்ட நடைமுறை வெற்றியடைந்துள்ளதாகவும், கேமரா மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வனவிலங்கு குறித்த கணக்கெடுப்பு என கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேர்.


Advertisement
ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்
புள்ளகுட்டி பெயர் சொல்வாரம்.. உதவியாளர் பெயர் வேணாமாம்.. வெற்றிமாறன் செய்தது சமூக நீதியா..? சூரியை கலாய்த்து தள்ளிய இளையராஜா..
வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை.. கேள்வி கேட்டால் அடி, உதை.. தப்பிக்க நினைத்தால் திருட்டுப் பட்டம்!
“எங்க வந்து யாருகிட்ட..” அட்ராசிட்டி பாயை ஓட விட்ட நகராட்சி ஊழியர்..! கடைக்கும் பூட்டு போட்டனர்
கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!
ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!

Advertisement
Posted Dec 03, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“கூடி விளையாட போனதுங்க.. மண்ணுக்குள்ள போயிருச்சே..” 7 பேர் பலியான பின்னணி..! கண்ணீரில் கதறித்துடித்த உறவுகள்

Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Posted Nov 29, 2024 in Big Stories,

லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!

Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்


Advertisement