சென்னையில் கொரோனா ஊரடங்கின்போது போலி கால்சென்டர் நடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனியார் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் அதன்மூலம் தனியார் வங்கியில் தனிநபர் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக மத்திய குற்றப் பிரிவின் வங்கி மோசடி தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி கோபிநாத், தியாகராஜன்,மணி பாலா ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடி கும்பல் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி பெயரை பயன்படுத்தி, தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி ஆசைகாட்டியுள்ளது. அவர்களது ஆவணங்களை பெற்று, கையில் வைத்திருக்கும் சிறுசேமிப்பு பணத்தையும் மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்று ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது புகார்களின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் கைதான தியாகராஜன் என்பவர் ஏற்கனவே சென்னை அண்ணாசாலையில் மிகப்பெரிய அளவில் போலி கால் சென்டர் நடத்தி சிக்கிய கும்பலோடு தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.