செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சாத்தான்குளம் விவகாரம் முதல் தகவல் அறிக்கைக்கு முரணான சிசிடிவி காட்சி

Jun 29, 2020 05:53:18 PM

சாத்தான்குளம் தந்தை-மகன் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக இருவரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக காவல் நிலையம் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகன், போலீஸ் விசாரணைக்கு பின் சிறையிலடைக்கப்பட்ட நிலையில் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர்.

அவர்கள் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கடையை அடைக்காமல் விசாரணைக்கு வர மறுத்து தர்ணாவில் ஈடுபட்டதாகவும், தரையில் உருண்டு புரண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே அவர்கள் இருவர் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்லும் போது அவர்களின் அருகாமையில் உள்ள கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில் கடந்த 19ந் தேதி இரவு 9.45 மணி வாக்கில் ஜெயராஜ் கடைக்கு வெளியே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருப்பது போன்றும் பிறகு சாலையின் மறுபுறம் நிற்கும் காவல் வாகனத்தை நோக்கி அவர் செல்வது போன்ற காட்சிகளும் உள்ளன.

ஜெயராஜ் காவல் வாகனத்தை நோக்கி சென்ற 2 நிமிடங்களுக்கு பிறகு அவரது கடைக்குள் இருந்து பலர் வெளியே வந்து வேடிக்கை பார்க்கும் காட்சிகள் உள்ளன. அப்போது பென்னிக்ஸ் கடைக்குள் இருந்து வெளியேறி வேகமாக காவல் வாகனத்தை நோக்கி செல்கிறார்.

காவல் வாகனம் சென்ற பிறகு வேகமாக கடைக்கு திரும்பும் பென்னிக்ஸ் கடையை சாத்திவிட்டு வேகமாக அங்கிருந்து புறப்படும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

19ந் தேதி இரவு ஒன்பதரை மணியில் இருந்து பென்னிக்ஸ் கடையை அடைக்கும் வரை அங்கு எவ்வித தகராறோ, வாக்குவாதமோ ஏற்பட்டது போன்ற காட்சிகள் இல்லை.

இதே போல் விசாரணைக்கு வராமல் இருவரும் தர்ணாவில் ஈடுபட்டது போன்ற சம்பவங்களும் அங்கு நடைபெற்றதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவில்லை. மேலும் காவல் நிலையத்திற்கு செல்லும் போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இயல்பான நிலையில் இருந்ததும் சிசிடிவி மூலம் தெரியவருகிறது.

முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கடைகளுக்கு அருகாமையில் இருந்த கடைகள் எதுவும் அடைக்கப்படவில்லை.

அந்த கடைகள் திறந்தே இருந்தன. அவற்றை அடைக்கும்படி போலீசார் கூறுவது போன்ற காட்சிகளும் இல்லை. இதனால் ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழப்பை தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் உண்மைத்தன்மை கேள்விக்கு உள்ளாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு தலைமை காவலர் உட்பட 27 போலீசார் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலில் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவர் உட்பட 4 போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆய்வாளர் ஸ்ரீதரும் இடைநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து புதிய ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் அனைவரும் கூண்டோடு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு தலைமை காவலர்கள் உள்ளிட்ட 27 காவலர்களை புதிதாக நியமனம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டுள்ளார்


Advertisement
கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!
ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்
வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி
சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..
“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி
புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!
அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..
ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்
திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!
திருச்செந்தூர் கோவில் யானை.. துதிக்கையை முத்தமிட்டு செல்ஃபி.. தூக்கி அடித்ததால் இருவர் பலி..! யானை ஆவேசமான பின்னணி..

Advertisement
Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி

Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..


Advertisement