டிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களைத் தானாகச் சேகரித்து வந்ததை ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ஐஒஎஸ் 14 பீட்டா பதிப்புகளில், க்ளிப் போர்டில் இருந்து விவரங்கள் சேகரிக்கப்படுவதை எச்சரிக்கை செய்யும் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது.
பயனர் விவரங்களை டிக்டாக் செயலி சேகரிப்பது கண்டறியப்பட்ட நிலையில், பல பயனர்கள் விவகாரத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவிடத் தொடங்கினர்.
இந்தப் பிழை, தொடர்ச்சியான மற்றும் ஸ்பேம் நடவடிக்கைகளைக் கண்டறியும் அம்சத்தால் ஏற்பட்டுவிட்டதாகவும், பிழையைச் சரி செய்வதற்கான அப்டேட்டை ஏற்கெனவே வழங்கி விட்டதாகவும் டிக்டாக் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் பயனர்களின் க்ளிப் போர்டு விவரங்களை இனிச் சேகரிக்க மாட்டோம் எனவும் டிக்டாக் தெரிவித்துள்ளது. இதேபோல் அக்யூவெதர், கால் ஆஃப் டியூட்டி மொபைல், கூகுள் நியூஸ் போன்ற செயலிகளும் ஐஒஎஸ் க்ளிப் போர்டு விவரங்களைச் சேகரித்தது அம்பலமாகி உள்ளது.