புதிய சேவை திட்டத்தின் கீழ் சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, ஐந்து ரோட்டை மையப்பகுதியாக கொண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்ட 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 7.87 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக மிக பிரம்மாண்டமாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக அண்ணா பூங்காவில் முடியும் பாலம் 5.01 கிலோமீட்டர் நீளம் கொண்டது. பாலத்தின் ஒரு பகுதி, ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரை 3 கிலோமிட்டர் தூரம் கொண்டது.
குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலத்தின் கட்டுமானப் பணிகளும் முடிவடைந்த நிலையில், இன்று திறக்கப்பட்டது.
சேலம் குரங்குச்சாவடி பகுதியில் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து பாலத்தில் வாகனப் போக்குவரத்தையும் கொடியசைத்து துவங்கி வைத்தார். மேலும் பாலத்தில் காரில் பயணித்து ஆய்வு மேற்கொண்டார்.
பாலத்தின் இரு புறமும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் திறக்கப்பட்டதால் சேலம் 4ரோடு, ஐந்து ரோடு, ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் இல்லாத நிலை ஏற்படும்.
குரங்குச்சாவடி முதல் அண்ணா பூங்கா வரையிலான பாலத்திற்கு ஜெயலலிதா மேம்பாலம் எனவும், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரையிலான மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர் மேம்பாலம் எனவும் முதலமைச்சர் பெயர் சூட்டினார்.
அதனை தொடர்ந்து, சேலம் லீ பஜார் பகுதியில் 46 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
class="twitter-tweet">சேலம் ஈரடுக்கு மேம்பாலம் முதலமைச்சர் திறந்து வைத்தார் | #Salem | #CMEdappadiPalaniswami https://t.co/pJOQFim5lT
— Polimer News (@polimernews) June 11, 2020