விழுப்புரம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலிக்கு சிகிச்சை பெற வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி மருத்துவர் சோதனை செய்ததாக வீடியோ பதிவு ஒன்று, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலி மற்றும் சளிக்காக இளைஞர் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். அப்போது பணியில் இருந்த மருத்துவர் பிரகாஷ் என்பவர் இளைஞரை 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து பரிசோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அருகில் இருந்தோர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதை அடுத்து அந்த வீடியோ வைரல் ஆனது.
இதனிடையே இளைஞரை தூரத்தில் இருக்க வைத்து பரிசோதனை செய்த விவகாரம் மருத்துவர் ராஜேஷ் மற்றும் பல்நோக்கு பணியாளர் பூஞ்சோலை ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தொடர்பாக வட்டார மருத்துவ அதிகாரி ஆர்த்தி மெமோ அனுப்பியுள்ளார்.