செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஒர்க் ப்ரம் ஹோம்… ஐ.டி.ஊழியர்களுக்கு மிச்சம் வியாபாரிகளுக்கு அச்சம்..! தவிக்க விடும் கொரோனா

Jun 05, 2020 08:02:25 AM

ஐ.டி ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து பணி செய்வதால் அவர்களை நம்பி ஓ.எம்.ஆர் சாலையில் கடை திறந்த வியாபாரிகள் மாதவாடகை கொடுக்க இயலாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐ.டி. ஊழியர்களுக்கு மிச்சத்தையும், வியாபாரிகளுக்கு எதிர்கால அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள ஒர்க் ப்ரம் ஹோம்மின் தாக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாகன நெரிசலால் காலையும் மாலையும் மூச்சுத்திணறிய ஓ.எம்.ஆர் சாலை, தற்போது மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது..

சென்னையில் மிக குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்த ஓ.எம்.ஆர் சாலையின் வரலாறு இவ்வளவு வேகமாக பின்னோக்கி இழுக்கப்படும் என்று எவரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. சாலைகள் மட்டுமல்ல அங்குள்ள கடைகளும் காற்று வாங்குகின்றது. ஏராளமான உணவகங்கள், பாஸ்ட் புட் கடைகள், அழகு நிலையங்கள், எப்போது திறக்கப்படும் என்பது தெரியாமல் பூட்டப்பட்டு கிடக்கின்றன.

அத்தனைக்கும் ஒற்றை காரணம், கொரோனா அச்சமும் அதனால் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒர்க் ப்ரம் ஹோம் கொடுத்ததும் தான். வீட்டில் இருந்தே பணி செய்வதால் பெண் ஊழியர்கள் ஆயிரங்களை கொட்டிக் கொடுக்கும் அழகு நிலையங்களை தேடிச்செல்வதில்லை...!

30 ரூபாய் ஜூசை தங்கள் சக தோழிகளுடன் வந்து 300 ரூபாய் கொடுத்து குடித்து குதுகலித்த நாட்கள் ஐ.டி காளையர்கள் பலருக்கும் மலரும் நினைவுகளாக மாறி போனது..!

ஐ.டி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் டக் இன் செய்த பிராண்டடு சர்ட் பேண்ட், ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து எடுக்கும் சல்வார், சுடி உள்ளிட்ட புத்தாடைகளுக்கும் தற்போது தேவையில்லாமல் போனதால் ஜவுளி செலவும் மிச்சம்.

அதே லட்சங்களில் சம்பளம் பெற்றாலும் ஆயிரத்தில் செலவழித்த தொகை வீட்டில் இருந்து பணி செய்வதால் சில நூறுகளில் முடிந்து விடுகின்றது என தெரிவிக்கும் ஐ.டி ஊழியர்கள், டிசம்பர் வரை ஒர்க் ப்ரம் ஹோம் என்று சில நிறுவனங்கள் அறிவித்திருப்பதை எல்லாம் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் வீக் எண்டு என்று ஆட்டம் போட்ட கால்கள், வீக்கிற்கு ஏது எண்டு? என்பதே தெரியாமல் முடங்கிக் கிடப்பதாக கவலையுடன் கூறுகின்றனர். தங்களது தேவைகள் குறைந்துள்ளதால் கிரெடிட் கார்டு பில் 75 சதவீதம் மிச்சமாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் நிறுவனத்தில் இருக்கும் இணையதள சேவையின் வேகம் வீடுகளில் இருப்பதில்லை என்பதால் அங்கு ஒரு மணி நேரத்தில் முடிக்கும் பணியை வீட்டில் இருந்து செய்வதற்கு 3 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படுவதாகவும், சக ஊழியர்களுடன் கலந்தாலோசனை என்பது இல்லாததால் புதிய பணிகளை முடிக்க காலதாமதம் ஆவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே ஐ.டி. ஊழியர்களை மைடியர் மார்த்தாண்டனில் பணக்கட்டுக்களுடன் வரும் அரச குடும்ப வாரிசாக நினைத்து இஷ்டத்துக்கு விலைவைத்து பணம் கறந்த ஐடியா மணி போன்ற வியாபாரிகள் தற்போது வியாபாரம் இல்லாமல் ஒரே செய்தித்தாளை ஒன்பது முறை புரட்டி புரட்டி படிக்கும் ஜென் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..!

வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் ஐ.டி ஊழியர்களுக்கு ஏராளமாக பணம் மிச்சமாகும் நிலையில், அதிக வாடகை கொடுத்து ஓ.எம்.ஆர் சாலையில் வாடகைக்கு கடை நடத்தும் வியாபாரிகள் ஏற்கனவே 3 மாத கொரோனா விடுமுறை, தற்போது கடை திறந்தும் போதிய வியாபாரம் இல்லை..!

இதனால் கடைக்கு வாடகை எப்படி கொடுப்பது ? இதனை நம்பி வாங்கி வைத்த கடன்களை எப்படி அடைப்பது ? தங்கள் குழந்தைகளுக்கு எப்படி கல்வி கட்டணம் செலுத்துவது ? என்று மிகுந்த விரக்தியோடு காணப்படுகின்றனர்.

ஏ.சி. அறையில் அமர்ந்து வேலைபார்க்க லட்சங்களில் சம்பளமா ? என்று ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோரை விமர்சித்தவர்கள் மட்டுமல்ல அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான், லட்சங்களில் சம்பாதித்தாலும் அவர்களின் தேவைக்கு ஏற்ப பல ஆயிரங்களில் மாத செலவு இருந்துள்ளது என்பதைத் தான்...

அந்த ஆயிரங்களால் தான் ஓ.எம்.ஆர் மட்டுமல்ல சென்னையில் பல ஷாப்பிங் மால்களில் வியாபாரம் தடையின்றி நடந்து பலருக்கும் சுய வேலைவாய்ப்பையும் கொடுத்து வந்திருக்கின்றது என்று சுட்டிக்காட்டும் பொருளாதார நிபுணர்கள், அனைவரும் சிக்கனம் என்று வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டால் அது வியாபாரத்தை பெருக்குவதற்கு பதிலாக பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்துசென்று விடும் என்கின்றனர் ..!

இதனால் தான் சென்னையில் கொரோனா பரவலை சவாலுடன் எதிர் கொண்டு கடைகள், தொழில் நிறுவனங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.


Advertisement
"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..
கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...
உதயநிதிக்கு அளிக்கப்படும் வரவேற்பு அவரை விட சிறப்பாக இருக்க வேண்டும்.. விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாகக் கூறிய அமைச்சர் பொன்முடி
வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!
ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி
சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்
வெடித்துச் சிதறிய வெங்காய வெடிகள் துண்டு துண்டான இளைஞரின் உடல்
உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”
த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Advertisement
Posted Nov 02, 2024 in வீடியோ,Big Stories,

"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கௌரவ கொலை செய்யப்பட்ட மகன்... போதையால் பாதை மாறியவர் திருட்டால் ஏற்பட்ட அவமானம்...

Posted Nov 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காதலனை கரம் பிடிக்க போலீஸ் வேடமிட்ட பெண்.. 'ஓசி'யில் மேக்கப் போட முயன்று சிக்கினார்..ராஜதந்திரம் அனைத்தும் வீணானது!

Posted Nov 02, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓவர்.. ஓவர் .. போதை.. ஓவர்.. போலீஸ்கிட்ட வம்புச் சண்டை.. சட்டையும்.. வண்டியும் போச்சு..! போதையன்ஸ் தீபாவளி அட்ராசிட்டி


Advertisement