தமிழகத்தில் ஆயிரத்து 162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, இவர்களில் சென்னையில் மட்டும் 967 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 700 ஐ தாண்டி விட்டது.
உலுக்கும் கொரோனாவால் மிரளும் தமிழகத்தில், கொரோனா பாதிப்பால் சென்னை திணறி வருகிறது. ஒவ்வொரு நாளும் உயிர்ப்பலியும், பாதிப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 967 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 770 ஆக உயர்ந்து உள்ளது.
செங்கல்பட்டில் 48 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, திருவள்ளூரில் 33 பேரும், காஞ்சியில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, இந்த 4 மாவட்டங்களில் மட்டும்
கொரோனாவுக்கு, ஆயிரத்து 57 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதுதவிர, ஒரே நாளில் சேலத்தில் 16 பேருக்கும், திருவண்ணாமலையில் 10 பேருக்கும், விழுப்புரத்தில் 8 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
சென்னையில் மட்டும் 7ஆயிரத்து 450 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 8 ஆயிரத்து 181 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்த 184 பேரில், 138 பேர் சென்னையைச்சேர்ந்தவர்கள். செங்கல் பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 11 பேர், கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.
மதுரையில் 3 பேரை, கொரோனா காவு வாங்கி விட்டது. வைரஸ் தொற்றின் உயிர்ப்பலி பட்டியலில், புதுக்கோட்டையும் இடம் பெற்றுள்ளது.