கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்ற மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசின் அறிவிப்பை ஒட்டி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில், அவ்விரு மாவட்டங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆகையால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கொரோனா மேலும் எளிதில் பரவக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக பேருந்துகளை இயக்கும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்குவது குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.