போலி சித்த வைத்தியர் திருதணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால், ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக போலி சித்த வைத்தியர் திருதணிகாசலம் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே அவரது ஜாமீன் மனுவை எழும்பூர் நீதிமன்றம் மே 18ம் தேதி தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு, நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திருதணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.