சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.
15 மண்டலங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 762ஆக உயர்ந்துள்ளது. இதில் ராயபுரம் மண்டலத்துக்கு அடுத்து கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 646 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 412 பேரும், திருவிக நகர் மண்டலத்தில் ஆயிரத்து 393 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆயிரத்து 322 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர் மண்டலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 89ஆக அதிகரித்துள்ள நிலையில், வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் 700ஐ தாண்டியுள்ளது. 6 ஆயிரத்து 330 பேர் சிகிச்சையில் குணமான நிலையில், 6 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர்த்து சென்னையின் 15 மண்டலங்களிலும் இதுவரை 102 பேர் பலியாகியுள்ளனர்.