கோயம்பேட்டில் இருந்து திருமழிசைக்கு மாற்றப்பட்ட தற்காலிக சந்தையில், சேமிப்பு வசதி இல்லாததால் மூட்டை மூட்டையாக காய்கறிகள் வீணாகி குப்பையில் கொட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்
கொரோனா தொற்றின் மையப்புள்ளியாக மாறிப்போன சென்னை கோயம்பேடு காய்கனி சந்தை மூடப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசைக்கு மாற்றப்பட்டது. சிறு வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்த வியாபாரிகள் மட்டுமே வியாபாரம் செய்து வருகின்றனர். கோயம்பேடு சந்தையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் டன்கள் வரை விற்பனையான காய்கனிகள் திருமழிசையில் சில நூறு டன்களே விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சந்தை நகரப் பகுதியில் அமைந்திருப்பதால் அதிகபட்ச விபாபாரம் நடந்ததாகக் கூறும் வியாபாரிகள், திருமழிசையில் அதற்கு நேர் எதிராக இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். எனவே சுகாதாரப் பணிகளை முடித்துவிட்டு கோயம்பேடு சந்தையை விரைவில் திறக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ((GFX 1 out))
திருமழிசையில் தினசரி மூட்டை மூட்டையாக நூற்றுக்கணக்கான கிலோ காய்கனிகள் குப்பையில் கொட்டப்பட்டு வருகின்றன.
கோயம்பேடு சந்தையில் காய்கனிகளை சேமித்து வைக்கும் கிட்டங்கி வசதி இருந்தாகக் கூறும் வியாபாரிகள், தற்போது வெயில் சுட்டெரிப்பதாலும், சேமிப்புக் கிட்டங்கி வசதி இல்லாததாலும், சிறு வியாபாரிகளை அனுமதிக்காததாலும் காய்கனிகள் வீணாவதாகத் தெரிவித்துள்ளனர்.