நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் நூறு பேராவது வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்குச் செல்வார்கள் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பேசிய அவர், நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். ஏழாயிரத்து முந்நூறு மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பத்தாம் பகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா எனச் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, மதிப்பெண்கள் வந்த பிறகு அரசு கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.