சிதம்பரத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா கசாயம் வழங்குவதோடு, தங்கள் கடை ஊழியர்களை ஜலதோசம் நெருங்காமல் இருக்க மூலிகை ஆவி பிடிக்க வைத்து முன் எச்சரிக்கையாக வியாபாரம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னைக்கு, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு அடுத்தபடியாக அதிக கொரொனா நோயாளிகளை கொண்ட கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட சிதம்பரத்தில் தான் தங்கள் வியாபாரத்துடன் வாடிக்கையாளர்களையும் அக்கறையுடன் கவனித்து வருகின்றனர்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரையும், முககவசத்துடன், கைகளை கழுவச்செய்து சமூக விலகலை உணர்த்தும் விதமாக கடைக்குள் இருக்கையில் அமர வைக்கப்படுகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்திக்காக மூலிகை கசாயம் தயாரித்து வழங்கப்படுகின்றது.
பின்னர் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பணியாளர் என இடைவெளியுடன் பொருட்கள் வழங்கப்படுகின்றது. முன்னதாக பணிக்கு வந்த பணியாளர் அனைவருக்கும் அவர்களை ஜலதோசம் நெருங்காமல் இருக்க மூலிகை வேது பிடிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
வியாபாரத்தை போலவே வாடிக்கையாளர் நலமும் முக்கியம் என்பதால் கொரோனா பரவலை தடுக்க தங்களால் இயன்ற பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர். இனி கொரோனா எச்சரிக்கையுடன் வாழபழகிக் கொள்ள வேண்டியது தான் போல.... என்பதே இங்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.