வீட்டுக்குள் புகுந்து தனிமையில் சிறுமியை சந்தித்த இளைஞரை, அந்த சிறுமியின் குடும்பத்தினர் சுற்றிவளைத்து தாக்கியதில், இளைஞர் உயிரிழந்த சம்பவம் பொள்ளச்சியில் நிகழ்ந்துள்ளது.
பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம். பொள்ளாச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்த கவுதம், தினமும் தங்கள் பகுதி வழியாக பள்ளிக்கூடம் சென்றுவரும் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை விரித்துள்ளார்.
16 வயதே ஆகும் அந்த மாணவியும் கவுதம் உடன் நட்பாக பழக தொடங்கி உள்ளார். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதாலும், ஊரடங்கு காரணமாக குடும்பத்தினர் அனைவரும் வீட்டிலேயே இருந்ததாலும் மாணவியை சந்திக்க முடியாமல் இருந்துள்ளார் கவுதம்.
இந்த நிலையில் கடந்த 7ந்தேதி கவுதம் உடன் போனில் பேசிய , அந்த மாணவி, தாய் தந்தை, சகோதரர் அனைவரும் வெளியில் சென்றுவிட வீட்டில் தான் மட்டும் தனியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யமஹா வாகனத்தில் மின்னல் வேகத்தில் மாணவியின் வீட்டுக்கு சென்ற கவுதம், சிறுமியுடன் தனிமையில் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்துவிட்ட மாணவியின் தாய், என்னசெய்வதென்று தெரியாமல் தனது கணவருக்கும், அண்ணனுக்கும் தகவல் தெரிவிக்க, அவர்களுடன் மாணவியின் சகோதரரும் வீட்டிற்கு வந்துவிட தங்கள் வீட்டு பள்ளி சிறுமியின் மனதை கெடுத்து விட்டதாக கூறி அந்த இளைஞரை குடிக்கெட் மட்டை மற்றும் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்ததால் கவுதம் உயிரிழந்து விடக்கூடாது என்று அஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் கவுதமை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்ததால் அந்த சிறுமியின் சகோதரர், தந்தை, மற்றும் உறவினரை கொலை வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.
படிக்கின்ற வயதில் வகுப்பு பாடங்களை மறந்த மாணவியின் விபரீத காதல் ஆசையால், ஒரு குடும்பமே கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
பள்ளி செல்லும் மாணவிகள், தாங்களே விரும்பி இளைஞரை காதலித்தாலும், சட்டத்தின்படி அவர்கள் அறியாமையில் செய்ததாகவே கருதப்படும், இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலும்.
அவர்களை நம்பி உருக உருக காதலிப்பதாக நினைத்து ஊர்சுற்றினால் வீணாக உயிரிழக்கும் விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.